மேம்பால பணிக்காக வாகனங்களை திருப்பி விட சர்வீஸ் சாலையில் தார் சாலை போடும் பணி துவக்கம்

மேம்பால பணிக்காக வாகனங்களை திருப்பி விட சர்வீஸ் சாலையில் தார் சாலை போடும் பணி துவக்கம்
குமாரபாளையம் மேம்பால பணிக்காக வாகனங்களை திருப்பி விட சர்வீஸ் சாலையில் தார் சாலை போடும் பணி துவக்கம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள் போராட்டத்தையடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. அதே போல் அதிக மக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி மாறியுள்ளது. தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் நிறைய உள்ளதால், மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாகனங்கள் சென்று கொண்டுள்ளன. ஒருமுறை பொதுமக்கள் சாலையை கடக்க காத்திருந்தால் பாதி தூரம் கடக்க சுமார் 15 நிமிடமும், பாதி தூரத்தில் இருந்து மறுபக்கம் செல்வதானால் மேலும் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகின்றது. இதனால் கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. பொதுமக்கள் கோரிக்கை ஏற்று மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. சில நாட்களில் புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்படவுள்ளன. இதற்காக சாலை விரிவு படுத்தி, புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Next Story