திருவாரூரில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு

திருவாரூரில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு

அமைச்சர் ஆய்வு

திருவருளில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு செய்தார்.

திருவாரூர் நகராட்சியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் வரி விதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தில் நகரில் உள்ள 30 வார்டுகளிலும் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணி ரூபாய் 78.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது . ஈவிஎஸ் நகரில் 6 லட்சம் கொள்ளளவு, கேடிஆர் எஸ்டெட்டில் 5 லட்சம் கொள்ளளவு,

கொடிக்கால் பாளையம் 5 லட்சம் கொள்ளளவு மற்றும் கிடாரங்கொண்டானில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட நான்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது இன்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார் .

ஆய்வின் போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ,எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story