புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜை

புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கான பூமி பூஜை

பூமி பூஜை 

சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிட பூமிபூஜை தொடங்கியது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், சிங்கம்புணரி பேரூராட்சி புதிய அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் துவக்கி வைத்து தெரிவிக்கையில்,

பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இந்த சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில், இப்பகுதி மக்களின் கூடுதல் தேவைகளை தெரிவிப்பதற்கு ஏதுவாகவும், பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய அலுவலக கட்டிடம் அமைப்பதற்கெனவும், ரூபாய் 01.00 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமையவுள்ள இப்பேரூராட்சிஅலுவலக கட்டிடத்தில், செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் அறை, மன்ற கூட்ட அறை, அலுவலர்கள் அறை, கணினி அறை, வரிவசூல் அறை, பதிவு அறை, பொதுமக்கள் அமர்வதற்கான தனி அறை, ஜெனரேட்டர் வசதி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் உட்பட பல்வேறு வசதிகள் இக்கட்டிடத்தில் அமையவுள்ளன.

இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள இக்கட்டுமான பணிகள் 12 மாதகால ஒப்பந்த அடிப்படையில் தரமான முறையில் கட்டி முடிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே, பணிகளை சிறப்பாக முடிப்பதாக தற்போது தெரிவித்துள்ளனர். மேலும், சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியின் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கென, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மொத்தம் ரூபாய் 57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில்,கடந்த 2021-2022 ஆம் ஆண்டுகளில், ரூபாய் 15.02 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல்,

ஊரணி மேம்பாடு, பூங்கா அமைத்தல், பள்ளி சுற்றுச்சூழல் அமைத்தல், வடிகால், மயான பணிகள், எரிவாயு தகனமேடை அமைத்தல், கழிப்பறைகள் கட்டுதல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுதல், உரக்கிடங்கு அமைத்தல் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு, தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, ரூபாய் 37 கோடி மதிப்பீட்டில் அம்ருத் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் பணி மற்றும் பகிர்மான குழாய் அமைத்தல் பணி,

அலுவலக கட்டிட கட்டுமான பணி என புதிய திட்டப்பணிகளும் நடைபெறவுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் ரூபாய் 5.50 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி, வடிகால் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி ஆகியவைகளை மேற்கொள்வதற்கான கருத்துருவும் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தற்போது இப்பேரூராட்சி தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ள நிலையில், இதனை நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோன்று சிவகங்கை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளையும் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

Tags

Next Story