ஆரணியில் நீட் விலக்கு கையொப்ப இயக்கம்

ஆரணியில் நீட் விலக்கு கையொப்ப இயக்கம்

கையெழுத்து இயக்கம் 

ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி திமுக சார்பில் கட்சி அலுவலகத் தில் நீட் விலக்கு கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப் பட்டது. நீட் தேர்வைரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் தமிழக முழு வதும் 50 நாள்களில் 50 லட்சம் கையொப்பம் பெறும் பணியை தொடங்கினர். ஆரணியில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எவ ரெஸ்ட் நரேஷ் தலைமையில் இந்தப் பணி தொடங்கப்பட்டது. இதில்நகர்மன்றத்தலைவர் ஏ.சி.மணி, திமுக ஒன்றியச் செயலர் எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் ஜெயராணி ரவி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி,ஒன்றியச் செயலர்கள் எம்.சுந்தர், எம்.மோகன், துரைமாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி செயலர் கோவர்தனன்,ஒன்றியக்குழுதுணைத் தலைவர் கே.டி.ராஜேந்திரன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story