பயிர் காப்பீடு திட்ட சான்றிதழ் வழங்கல்

பயிர் காப்பீடு திட்ட சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ்வழங்கல்

பயிர் காப்பீடு திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தேவிகாபுரத்தில் பார தப் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிக்கு பதிவு சான்றிதழினை மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் சைதை.வ.சங்கர் வழங்கினார். கடந்த 2019-2020 ஆம் ஆண்டு (பசலி 1429) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,

சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும் போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தெற்கு மண்டல தேவிகாபுரம் பொது சேவை மையத்தில்

பாரதப் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிக்கு பதிவு சான்றிதழினை மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் சைதை சங்கர் வழங்கினார். இதில் ஆரணி வடக்கு மண்டல் தலைவர் குணாநிதி, ஆரணி தெற்கு மண்டல் பிரபாரி சேட்டு, முன்னாள் மாவட்ட நிர்வாகி நீலமுருகன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவின்பொருப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story