நாட்டுப் படகு மீனவர்கள் வெளிநடப்பு

நாட்டுப் படகு மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு மற்றும் ஒழுங்கு முறை சட்டத்தின் நகலை கிழித்தெறிந்து போராட்டம

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீழ்க்கண்ட. கோரிக்கைகளை முன்னிறுத்தி கடல் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் .கருணாமூர்த்தி தலைமையில் 100 -க்கும் அதிகமான மீனவர் மற்றும் மீனவ பெண்கள் வெளிநடப்பு செய்தனர்.

வாலிநோக்கம் மற்றும் கீழமுந்தல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதி முழுவதும் நாட்டுப்படகு மற்றும் கரைவலை தோனி மீனவர்களின் மீன்பிடி வலைகள் அறுத்து நாசம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ள தூத்துக்குடி விசைப்படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது.

மட்டுமன்றி மேற்படி படகுகள் அரசின் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் அனுமதித்துள்ள 240 குதிரை திறனுக்கும் மேலாக கூடுதல் குதிரை திறன் கொண்ட சீன இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் என்பது தெரிந்தும் அரசியல் தலையீடு காரணமாகவும் மீன்வளத்துறையில் லஞ்ச ஊழலில் ஊறி திளைத்துப்போன அதிகாரிகளாலும் மேற்படி படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட அனுமதிக்கப்படுவதை கண்டித்தும் அதே போல் நாகை, காரைக்கால் மாவட்ட விசைப்படகுகள் எஸ்.பி பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரையிலான கடல் பகுதி முழுவதும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கிடையில் நடைமுறையில் இருந்து வரும் தொழில் ஒழுங்கு முறைகளை சீர்குலைக்கும் வகையில் வாரக்கணக்கில் கடலிலேயே தங்கி மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும்

பொதுவாக இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள மீன்வளத்துறைக்கும் , கடலோர காவல் குழும நிர்வாகத்திற்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரோந்து படகுகள் வழங்கப்படாததை கண்டித்தும் இராமேஸ்வரம் தாலுகாவில் தொடர்ந்து நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக வசித்துவரும் சேராங்கோட்டை, கோதண்டம் கரையூர், சேதுபதி நகர் மீனவ கிராம மக்களுக்கு

இது நாள் வரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாதது மட்டுமன்றி அவர்களின் வசிப்பிடங்களை முறையாக ஆய்வு செய்யாமலும் சம்மந்தப்பட்ட பகுதி மக்களுக்கு தெரியாமலும் வனத்துறை வசம் ஒப்படைக்க காரணமான வருவாய்த்துறை, மற்றும் நகராட்சி நிர்வாகங்களை கண்டித்தும் மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளத்துறையின் பரிபூரண அனுமதியுடன் மண்டபம் மற்றும் இராமநாதபுரம் (தெற்கு) மீன்வளத்துறையின் நிர்வாக எல்கைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறும் சுருக்குமடி மீன்பிடிப்பு குறித்தும் இது விசயத்தில் கைமாறும் தொகை குறித்தும் முறையான பொது விசாரணை நடத்திட கோரியும் மீனவர்களுக்கான மீன்பிடி குறைவு கால நிதி , மீன்பிடி தடை கால நிதி கடல் மீனவர் சேமிப்பு நிவாரண நிதி உள்ளிட்ட அரசின். நிவாரண உதவிகள் சுமார் 9000 மீனவர்களுக்கு இதுவரை கிடைக்கப்படாதது

குறித்தும் மீன்பிடிக்க சென்ற இடத்தில் கடலில் தவறி விழுந்து உயிர் இழந்த மீனவர் குடும்பங்களுக்கு அரசின் இன்சூரன்ஸ் தொகை ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை கிடைக்கப்படாதது குறித்தும் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது இதுவரை எவ்வித முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை கண்டித்தும் வெளிநடப்பு செய்த மீனவர்கள் தமிழக அரசின் 1983 தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குமுறை சட்ட நகலை கீழே வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட நிகழ்வில் வாலிநோக்கம், நம்புதாளை, சேராங்கோட்டை,கோதண்டம் கரையூர், மண்டபம் தோப்புக்காடு. உள்ளிட்ட மீனவர்கள் பங்கேற்றனர் .

மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் உடன் நிறைவேற்றப்படாத பட்சத்தில் முதல் கட்டமாக வாலிநோக்கத்தில் கடலில் நாட்டுப்படகுகளுடன் போராட்டம் நடத்துவதுடன்.-. தூத்துக்குடி விசைப்படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை தீ வைத்து கொளுத்தும் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மீன்பிடி கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கர்ணாமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Tags

Next Story