மேல்பாலூரில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
கோவில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலைமாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல் பாலூர் கிராமத்தில் நேற்று அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில்ஜீர்ணோத் தாரண நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழாவெகு விமர்சையாக கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. அதில் நேற்று முன் தினம் காலை 8 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, ஸ்ரீலட்சுமி பூஜை, ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம், மாலை 4 மணி அளவில் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருஷ்யு சங்கிரஹனம், அங்குரார்ஹணம் கும்பாலங்காரம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது.
அதில் முதல் கால தியாக பூஜை நடைபெற்றது அதில் மகா பூர்ணாஹீதி மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்துநேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹீதிமகா ஜீவராதனை நடைபெற்றது.
அதில் காலை 8:45மணிக்கு கலசம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுமேலும் காலை 9 மணி அளவில் ஸ்ரீ மாரியம்மனுக்கு மகாகும்பாபிஷேக திருவிழா நடைபெற்று. மேலும் இந்த கோவிலில் அம்மனை முறையாக வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது வைதீகமாக திகழ்ந்து வருகிறது.
அதனால் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்திற்கு கலந்துகொண்டு அவர்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வந்தனர் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக திருவிழாவில் பெ.சு.தி.சரவணன், எம் எல்ஏ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானங்களையும் வழங்கினார்.
மேலும் கோவிலுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமீ தரிசனம் செய்து அன்ன தானங்களை பெற்றுக்கொண்டு சென்றனர்.