ஆம்பூரில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா

ஆம்பூரில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா

சிறுதானிய உணவு 

ஆம்பூரில் பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பெத்லேகம் பகுதியில் இயங்கி வருகிறது நகராட்சி நடுநிலைப்பள்ளியில், இப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 360 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நகராட்சி நடுப்பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாபெரும் உணவு திருவிழா நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பாரம்பரிய உணவுகளான சிறுதானிய வகைகளில் சுண்டல்கள், கேழ்வரகு அடை, தயிர்சாதம், புளிசாதம், பிரியாணி, கருவேப்பிலை சாதம், களி, இனிப்பு வகைகள், மீன், பயாசம், கேசரி, போன்ற 278 வகையான சைவம், மற்றும் அசைவ உணவுகளை சமைத்து பின்னர் அதனை காட்சிப்பட்டுத்தி பள்ளி மாணவர்களுக்கு அனைத்து உணவு வகைகளும் மற்றும் அதனை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்..

பின்னர் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து வகையான உணவுகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்த உணவு திருவிழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story