மலை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றம்..!

மலை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றம்..!

கார்த்திகை தீபம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர்கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சி யில்மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கோவிலில் நாளை அதி காலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் 5 தீபங்களாக காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் ‘பரணி தீபம்” என்று பெயர் பெற்றது. அருணாசலேஸ்வரர் கோவி லில் பரணி தீப தரிசனத்திற்காக 2500 முதல் 3000 பக்தர்கள் வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது. ஒளிபடும்படி ஏற்ற வேண்டும். இந்த விளக்கில் நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. இந்த பரணி தீபத்தினை வீட்டில் நாம் ஏற்றினால் நம் முன் னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நாம் செல்லும் உலகங்களில் எம்னுடைய வதம் இன்றி துன்பம் இன்றி இருக்கலாம் என்பது ஐதீகம்.

இந்த பரணி தீபத்தின் முக்கியமான சிறப்பு என்னவென்றால் பஞ்சபூதம் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பதுதான். இந்த பரணி தீபம் விளக்குகளைக் கொண்டு ஏற்றப்படுகிறது. அப்படி ஏற்றுவதினால் அகமும் புறமும் சிறப்பாக செயல்படும் மகிழ்வாக இருப்போம் என்பது ஐதீகம் மேலும் பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, காற்று உள்ளிட்ட அனைத்தும் அளவாக நமக்கு கிடைக்க வேண்டிதான் இந்த பரணி தீபம் ஏற்றப்படுவதாக சொல்லப்படுகிறது. தீப பலன் கள் நமது வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். 2 முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். 3 முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். 4 முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். 5 முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். திருவண்ணாமலையில் 7ம் நாள் பஞ்சரத தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி எங்கும் மாலை விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். தீபத்தின் மகிமைகள் கோவில்களில் திருகார்த்திகை அன்று 5 காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும். வாசலில் 2 தீபமும், பூஜை அறையில் 5 தீபமும் ஏற்ற வேண்டும். இந்த தீபங்களையும் வட்டமாக எல்லாம் திசையும் மகாதீபம் ஏற்றப்படுவதால் உள்ளூர் வெளிமாவட்டம் ,வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர் கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக் கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவல பாதையில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக விழுப்புரம் மற்றும் சகோதர போக்குவரத்து கழகங்கள் மூலம் இன்று (25ந்தேதி) முதல் (27ந்தேதி வரை 2700 பேருந்துகள் மூலம் 6832 நடைகள் இயக்கப்படவுள்ளது.

மேலும் சென்னை பெங்களூர் சேலம் ஓசூர் மதுரை கோயம்பத்தூர் கும்பகோணம் திருச்சி ஆகிய பகுதியிலிருந்து முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தங்கும் விடுதி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story