சந்தேகத்தால் நடந்த கொலை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

சந்தேகத்தால் நடந்த கொலை விவசாயிக்கு ஆயுள் தண்டனை
1
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி, செட்டியார் தெருவை சேர்ந் தவர் அக்பர் அலி, 51; இவரது தோட்டத்துக்கு பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் 48; இவரது வீட்டுக்கு அக்பர் அலி அடிக்கடிவந்து சென்றார். இதனால் மனைவியுடன் பழகுவதாக, அய்யம்பெருமாள் சந்தேகப்பட்டு, அவருடன் தகராறு செய்தார் இந்நிலையில், 2020 செப்.,11ம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்ட அக்பர் அலியை, அய்யம்பெருமாள் மண் வெட்டியால் தாக்கியதில் இறந்தார். கெங்கவல்லி போலீசார் அய்யம்பெருமாளை கைதுசெய்தனர்.சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது இதில் நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பளித்தார் அய்யம்பெருமாளுக்கு சிறை ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Next Story