இல்லோட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட்போட்டி

இல்லோட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட்போட்டி
இல்லோட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட்போட்டி
இல்லோட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட்போட்டி நடைபெற்றது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வல்லம் ஒன்றியம் இல்லோடு ஊராட்சியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன் தலைமை தாங்கினார். வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம் வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் இல்லோடு சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கி போட்டியை தொடங்கி வைத்து சிறிது நேரம் விளையாடினார்.

கிரிக்கெட் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.

Tags

Next Story