ஆரணவல்லி அம்பாள் சமேத பூமிநாத ஈஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா

ஆரணவல்லி அம்பாள் சமேத பூமிநாத ஈஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா

கும்பாபிஷேகம்

பொன்னமராவதி அருகேயுள்ள செவலூர் ஆரணவல்லி அம்பாள் சமேத பூமிநாத ஈஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட இக்கோயில் வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்யும் தலமாகும். இக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற திருப்பணிகளைத் தொடர்ந்து புதன்கிழமை யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. நான்காம் கால யாகபூஜைகள் நடைபெற்று, காலை 10 மணியளவில் சிவாச்சாரியார்கள் புனித நீரை கும்பத்தில் ஊற்றி பூமிநாத ஈஸ்வரர் மற்றும் பரிவார தெய்வ சன்னிதிகளுக்கு குடமுழுக்கு செய்தனர்.விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். குடமுழுக்கு வர்ணனையை பட்டிமன்ற பேச்சாளர் திருக்களம்பூர் நெ. ராமச்சந்திரன் செய்தார். யாக பூஜையில் வைத்து பூஜித்த செங்கல்களை வீடு கட்டுவோர், கட்ட எண்ணுவோர், கட்டடப்பணி தடைபட்டோர் வாஸ்து நலன் வேண்டி பெற்றுச் சென்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள், செவலூர் ஊரார்கள் மற்றும் நகரத்தார்கள், புதுக்கோட்டை தேவஸ்தான தலைமை அலுவலக பணியாளர்கள்,திருக்கோயில் பணியாளர்கள் செய்தனர்.
Next Story