வாடகை பாக்கி உள்ள கடைக்கு 'சீல்'

வாடகை பாக்கி உள்ள கடைக்கு சீல்

கோப்பு படம் 

வாடகை பாக்கி உள்ள கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி பகுதியில் வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி என ரூ.6 கோடிக்கு மேல் பாக்கி உள்ளதால் நகராட்சி ஆணையாளர் ராணி தலைமையில் அலுவலர்கள் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வரிகளை வசூலித்து வருகின்றனர்.

மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடைக்கு சென்று ஆணையாளர் ராணி ஆய்வு செய்தார். அப்போது ரூ.27 ஆயிரத்துக்கு மேல் வாடகை பாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் வரி மற்றும் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டது.

பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரி நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம் என்று ஆணையாளர் ராணி கூறினார்.அப்போது நகராட்சி மேலாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கணக்காளர் பிச்சாண்டி மற்றும் நகராட்சி அலு வலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story