எடப்பாடியில் தமிழ்நாடு அரசு சார்பில் பொது மருத்துவ முகாம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைந்து நடத்தும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு... சிறப்பு பொது மருத்துவ முகாம் நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கேற்றியும் துவக்கி வைத்தார்.

. இந்த முகாமில் மகப்பேறு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சத்தான பழவகைகள், சர்க்கரை நோயாளிக்குக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது... தொடர்ந்து அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சையளிக்கப்பட்டது.

இம்முகாமில் மருத்துவர்கள் சந்திரமோகன், மோகன்ராஜி, மனோசித்ரா உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள் பங்கேற்று அனைத்து வகை நோய்களுக்கும் சிகிச்சையளித்தனர். அப்போது நகராட்சி ஆணையாளர் முஸ்தபா உட்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றுச்சென்றனர்.

Tags

Next Story