வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
இடக்கழிநாடு பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் இடக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட விளம்பூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்தாஅய்யனார் தலைமையில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் கண், காது,மூக்கு, மற்றும் சித்த மருத்துவம், இருதயநோய் மருத்துவம், பல் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் சூனாம்பேடு வட்டார மருத்து அலுவலர் ரங்கசாமி உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.