ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் சொர்ண லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ விழா

ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் சொர்ண லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ விழா

சிறப்பு வழிபாடு

ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் சொர்ண லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பிரதோஷத்தை முன்னிட்டு சொர்ண லிங்கேஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ சொர்ண லிங்கேஸ்வரருக்கு மகாதீபாரணை காட்டப்பட்டது. இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story