ராமநாதபுரத்திற்கு தண்ணீர் திறப்பு

ராமநாதபுரத்திற்கு தண்ணீர் திறப்பு

தண்ணீர் திறக்கப்பப்டது.

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறப்பு

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து நேற்று முன்தினம் 6000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது இந்த தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்தது மதகணையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை உள்ள முறை பாசன கண்மாய்களுக்கு பாசன வசதி செய்வதற்காக இடது மற்றும் வலது புறம் கால்வாய் மூலமாக ஒரு வினாடிக்கு 4000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தண்ணீரை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த தண்ணீர் மூலம் 67,873 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story