கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

கோப்பு படம் 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், நவ.26- கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கீழ்பென்னாத்தூரையடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி வயது 45 கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் பழனி மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் கார் கம்பெனி அருகில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வேகமாக சென்ற அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் சப்இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்தும் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story