திண்டுக்கல் ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மனு அளிக்கும் பொதுமக்கள்
திண்டுக்கல் : மத்திய அரசின் நிதி விரயம் செய்யப்படுவதாக பா.ஜ., புகார் என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 351 பேர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில்,ஆத்துார், அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றின் குறுக்கே தேவரப்பன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பாலம் அமைப்பதாக கூறி தென்னை விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் நிலமாக மாற்றுவதற்காக, இதன் நிதியை தேவரப்பன்பட்டி ஊராட்சி வீண் விரையம் செய்து வருகிறது.அனுமதி இல்லாமல் மக்களுக்கு பயனற்ற வகையில் ஊராட்சி நிர்வாகம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.