சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
சிறப்பு முகாம்
அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் எருத்துகாரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மகாலிங்கபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது. இதனை ஊராட்சிமன்ற தலைவர் சிவா தொடங்கி வைத்தார். இதில் 250 பசுமாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், 200 செம்மறியாடுகள் மற்றும் 600 வெள்ளாடுகளுக்கு ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி செலுத்தபட்டது. மேலும் 10 பசுமாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யபட்டது. பின்னர் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அரியலூர் கோட்ட உதவி இயக்குனர் ரிச்சர்ட் ராஜ், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார் உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள், உதவியாளர்கள், அக்கிராம பொதுமக்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story