செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை சிப்காட் விரிவாக்கம் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சிப்காட் விரிவாக்க போராட்டத்தில்,

போராடிய 31 விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்ததை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு எதிராக நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கொண்டு வந்ததை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார் . மாநில பொருளாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கவியரசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசும் போது தமிழக அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் வளர்ச்சிக்காக எந்தவிதமான நல்ல திட்டங்களையும் இதுவரை கொண்டு வரவில்லை. தமிழக அரசு விவசாயத்தை முற்றிலுமாக புறக்கணித்து விட்டது. தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ன் படி தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தும்

முயற்சியில்தான் உள்ளது. மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. தமிழக விவசாயிகள் விவசாயம் செய்யும் விலை நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியதற்கு சிப்காட் தொழில் பூங்கா திட்டம் என்பது விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் திட்டமாகும்.தமிழக அரசு விவசாயிகளுக்கு

எதிராக கொண்டுவரும் சிப்காட் தொழில் பூங்கா திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். விவசாயிகள் பயிர் செய்யும் விலை நிலங்களை சிப்காட் தொழில் புங்கா திட்டத்திற்கு கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தமிழகத்தில் உள்ள விவசாயத்தை அழிக்கும் நோக்கத்தோடு சிப்காட் தொழில் பூங்கா மற்றும் பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டம் மற்றும் எட்டு வழி சாலை திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழக விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களாக உள்ளதால் திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு திரும்ப பெற வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் வாக்கடை புருஷோத்தமன், மாவட்டச் செயலாளர் பாணாம்பட்டு ரமேஷ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story