சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கம்

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கம்
சாஸ்த்ராவில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடக்கம்
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 'புதிய எல்லைகள், புதிய அணுகுமுறைகள்: வளரும் நாடுகளில் நெறிமுறை செயல்திறன் மேலாண்மை' என்ற தலைப்பிலான 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

சிட்டி யூனியன் வங்கி - டாக்டர் கலாம் மேம்பாட்டு ஆய்வு மையம், ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் ஆஸ்திரேலியாவின் செயல்திறன் மேலாண்மை சங்கம் சார்பில் நடைபெறும் இக்கருத்தரங்கத்தில் நியூஸிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளி பேராசிரியர் ரால்ப் அட்லர் துவக்க உரையாற்றினார். இத்தாலி சீட்டி- பெஸ்காரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மாசிமோசர்கியாகோமோ,

நெதர்லாந்து நயன்ரோட் மேலாண்மை பல்கலைக்கழக வணிக ஆய்வுகள் துறை பேராசிரியர் ரோலன் ஸ்பெக்லே, ஆர்.ஆர்., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் செயல் திறன் மேலாண்மை பன்னாட்டுத் தலைவர் பூஜா சாவ்லா சங்கவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கருத்தரங்கத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூஸிலாந்து, பிரான்ஸ், ஐவரி கோஸ்ட், தைவான், ஓமன் உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு 41 ஆராய்ச்சி கட்டுரைகளை அளிக்கவுள்ளனர். மு

ன்னதாக, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவன உறவுகளின் முதன்மையரும், கருத்தரங்க அமைப்பாளருமான வி. பத்ரிநாத் வரவேற்றார். மேலாண்மைத் துறை முதன்மையர் எஸ். செல்வபாஸ்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story