ராமநாதபுரம்: முற்றுகை போராட்டம்

தாய் தமிழர் கட்சியின் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம். காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு.

தாய்தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பீமாராஜன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஆலமரம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பிய படியே ஆட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட ஊர்வலமாக சென்றனர்

ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் முன்பு தடுப்புகள் அமைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறைக்கும் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந் நிலையில் அமைதியான வழியில் மக்களுக்காக போராட்டம் நடத்துகிறோம் இதனை காவல்துறையினர் கலவரமாக மாற்றுகின்றனர். காவல் துறை அராஜகம் ஒழிக என கோசங்களை எழுப்பினர். அனைவரையும் முற்றுகை போராட்டம் நடத்திய தாய் தமிழர் கட்சியினர் 56 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மகாலில் தங்க வைத்துள்ளனர்.

கொட்டும் மழையில் முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

Tags

Next Story