திருப்பத்தூரில் நகராட்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருப்பத்தூரில் நகராட்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்

திருப்பத்தூரில் நகராட்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் நகரம் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள மின் மயானத்தில் நகராட்சி நிர்வாகம் தேக்கி வைத்துள்ள குப்பைகளை அகற்றாமல் அதனை அகற்றி விட்டதாக தமிழக முதல்வர் முகவரிக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ள திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நகராட்சி மூலம் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்யாததை விளக்கியும் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோட்டை பகுதி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜாபர்சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள ஆரிப் நகரில் உள்ள வீடுகளுக்கு நகராட்சி மூலம் பல நூறு இணைப்புகள் தந்து 18 மாதங்கள் ஆகியும் இதுவரை தண்ணீரை விநியோகம் செய்யவில்லை அதை உடனடியாக வழங்க வேண்டும் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் பட்டா பெயர் மாற்றம் பட்டா பிரித்தல் ஆகியவைகள் குறித்து விண்ணப்பித்தால் அதை வழங்க நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் திருப்பத்தூர் நகர் பகுதியில் தொழில்வரி கேட்பு முறையில் லஞ்சம் கேட்கும் நடைமுறைகளை தொடர்ந்து தவிர்க்க வேண்டும் மேலும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் குப்பைமேடுகள் அங்கங்கே உடனே அதனை உடனடியாக சுத்த செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags

Next Story