ஊத்துமலையில் பாஜக சாா்பில் கபடிப் போட்டி

ஊத்துமலையில் பாஜக சாா்பில் கபடிப் போட்டி

பரிசை வென்ற அணி

ஊத்துமலையில் பாஜக சாா்பில் கபடிப் போட்டி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் பாஜக சாா்பில் கபடிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வி.ஆா்.என் லெட்சுமிபுரம் அணி முதலிடமும், செட்டியூா் அணி 2ஆவது இடமும், ஊத்துமலை மோடி கிங்ஸ் அணி 3ஆவது இடமும் பெற்றன. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்ட விவசாய அணித் தலைவா் முத்தையா பாண்டியன் தலைமை வகித்தாா்.

ஒன்றியத் தலைவா் டாக்டா் வி. அன்புராஜ், மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா் விஜயசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக இணை பொறுப்பாளா் அன்புராஜ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

Tags

Next Story