பார்வைதிறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டி

பார்வைதிறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டி

விளையாட்டு போட்டிகள் தொடக்கி வாய்ப்பு

தி.மலை மாவட்ட விளையாட்டரங்கில் பார்வைதிறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை விளையாட்டரங்கில் பார்வை திறன் பாதிக்கப்பட்டோர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி நேற்று துவக்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் பள்ளி கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன.

இந்த விளையாட்டு போட்டிகள் துவக்க விழாவுக்கு மாவட்ட கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் ஜெ.சின்னப்பன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார்.

பார்வை குறைபாடு, காது கேளாமை, அறிவுத்திறன் குறைபாடு, உடல் ஊனமுற்றோர் குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. 100 மீட்டர் ஓட்ட போட்டி, நீளம் தாண்டுதல்,குண்டு எரிதல் ,உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் 14, 17, 19 ஆகிய வயதுடைய 250க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றிபெற்ற பார்வை திறன் பாதிக்கப்பட்டோர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.சங்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story