மறுசீரமைக்கப்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியினை திறந்து வைத்த ஆட்சியர்

குரூப்பின் குருவம்மாள் அறக்கட்டளை சார்பில் மறுசீரமைக்கப்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

போத்தீஸ் குரூப்பின் குருவம்மாள் அறக்கட்டளை சார்பில் மறுசீரமைக்கப்பட்ட நகராட்சி நடுநிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சி ஊரணிபட்டியில் போத்தீஸ் குரூப்பின் குருவம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.60 இலட்சம் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், அடுத்து வரக்கூடிய மூன்று ஆண்டுகளுக்கு இந்த பள்ளியின் உட்கட்டமைப்பு, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த நகராட்சி பள்ளியினை தத்தெடுத்து,

இந்தப் பகுதியில் வாழக்கூடிய ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நிதி உதவி வழங்கி இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களில் ஏறத்தாழ 97 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.

மேலும் ஒரு சில சூழலில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலையில் இது போன்ற நிறுவனங்கள் தங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் உதவிகள் வழங்கினார்கள். அதன் காரணமாக, இந்தியாவிலேயே மாவட்டத்தில் அதிகமாக உயர்கல்விக்கு சென்றுள்ள மாணவர்களின் விழுக்காட்டினை 97 சதவிகிதம் எட்டியுள்ளோம்.

இந்த ஆண்டு 100 சதவீதம் எட்டுவதற்கு முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் 200 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள், 70 நடுநிலைப் பள்ளிகள், 200க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை பல்வேறு திட்டங்களின் மூலமாக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மறுசீரமைக்கப்பட்ட பள்ளியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, குருவம்மாள் அறக்கட்டளை நிர்வாகம் ரமேஷ் குமார், திருவில்லிபுத்தூர் நகர மன்ற தலைவர் ரவிக்கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story