குழந்தைகளை பாதுகாக்க கவனம் தேவை
கோப்பு படம்
குழந்தைகளை பாதுகாக்க கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமதுரை பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் டி.ஆர். முத்துகுமாரசாமி கூறியதாவது:ஆபத்தான உலகில் குழந்தைகளை மிகவும் கவனமாக பெற்றோர்கள் வளர்க்க வேண்டும்.குழந்தைகள் எதிர்பாராதவிதமாக பல்வேறு ஆபத்துக்களில் சிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குறிப்பாக கடலை போன்ற உணவுப் பொருள்கள், காசு, பட்டன், பேட்டரி போன்றவற்றை தவறுதலாக விழுங்கினால் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். வீட்டிலிருக்கும் மண்ணெண்ணெய், ஆசிட் போன்றவற்றை தவறுதலாக குடித்தால் நுரையீரல்,உணவுக் குழாய் பாதிக்கும். நீர்நிலைகள், வீட்டு தொட்டிகளில் விளையாடச் செல்லும்போது நீரில் மூழ்கவும் வாய்ப்புள்ளது என்றார்.
Next Story