கலைஞர் குழுவின் பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கு - ஆட்சியர் தகவல்.

கலைஞர் குழுவின் பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கு - ஆட்சியர் தகவல்.

கலைஞர் குழுவின் பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கு - ஆட்சியர் தகவல்.

கலைஞர் குழுவின் பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கு - ஆட்சியர் தகவல்.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கினை நடத்துவதென குழு தீர்மானித்து, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் மற்றும் தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் DER. சுகுமார் ஆகியோர் உள்ளடங்கிய துணைக் குழுவானது, சட்டமன்றப் பேரவை உயர் அலுவலர்களுடன் நாமக்கல் மாவட்டத்தில் 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளில் இக்கருத்தரங்குகளை வருகிற 6-12-2023 (புதன்கிழமை) மற்றும் 7-12-2023 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படவுள்ளது.

இக்கருத்தரங்குகள் 6-12-2023 (புதன்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் இரா.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நண்பகல் 12-00 மணியளவில் ரெட்டிப்பட்டி, பாரதி மேல்நிலைப் பள்ளியிலும், பிற்பகல் 3-00 மணியளவில் நாமக்கல் (தெற்கு), அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.

மேலும், 7-12-2023 (வியாழக்கிழமை) அன்று காலை 10-00 மணியளவில் நாமக்கல், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், நண்பகல் 12-00 மணியளவில் நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், பிற்பகல் 3-00 மணியளவில் ஆண்டகளூர்கேட், இராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியிலும் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story