ராசிபுரம் அருகே சாலை ஆக்கிரமைப்பு அகற்றாததால், வீடுகளில் கருப்பு கொடி
கருப்பு கொடி
ராசிபுரம் அருகே சாலை ஆக்கிரமைப்பு அகற்றாததால், வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள். மாவட்ட ஆட்சியர் அளவீடு செய்தும், அதிகாரிகள் கட்டுக்கொள்ளாததால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், வருவாய் கோட்டாட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியம் பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சியில் ஒரு தரப்பு மக்கள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனிடையே மற்றொரு தரப்பினர் ஆக்கிரப்புகளை அகற்றாமல் சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் சாலை அமைக்கும் பணிக்கு தடை ஏற்பட்டது. ஏற்கனவே வட்டாட்சியர் சரவணன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.
நில அளவையாளர்களை கொண்டு ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளதா என அப்பகுதியை அளவீடு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இருதரப்பினரிடமும் பேச்சு நடத்தி பிரச்னைக்கு சமூக தீர்வு காணப்படும் என ஆட்சியர் உமா தெரிவித்தார். இந்நிலையில், இன்று ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி தங்களது வீடுகளில் கருப்பு கொடிகட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் யாரும் அங்கு செல்லாத நிலையில், மாலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் கோட்டாட்சியர் சரவணன், ராசிபுரம் தாசில்தார் சரவணன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஆகியோரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் சரவணன் கூறியதையடுத்து பொதுமக்கள் களைந்துச் சென்றனர்.