சாலையில் நடந்து சென்ற நபரிடம் வழிப்பறி செய்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நெடுங்கூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெள்ளைச்சாமி வயது 50 என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நபர் ஒருவன் கத்தியை காட்டி பணம் தருமாறும் இல்லையென்றால் கொண்றுவிடுவதாக மிரட்டி வெள்ளைச்சாமியிடம் இருந்த 500 ரூபாயை பறித்துச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்கின் குற்றவாளியான திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மதன்குமார் வயது 22, என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி மீது திருச்சி மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்த நிலையில் குற்றவாளி மதன்குமார் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படியும் டிஎஸ்பி பழனிச்சாமி வழிகாட்டுதலின்படியும் குற்றவாளியை பாடாலூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.