பிறந்த நாளை கொண்டாடுவதை தவிா்க்க திமுகவினருக்கு வேண்டுகோள்

பிறந்த நாளை கொண்டாடுவதை தவிா்க்க திமுகவினருக்கு வேண்டுகோள்

கு. பிச்சாண்டி

தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதை தவிா்க்க திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் - கு பிச்சாண்டி

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான பிச்சாண்டி, அவர்களின் பிறந்தநாள் விழாவினை திமுகவினர் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கியும் கிராமங்களில் கட்சி கொடிகளை ஏற்றியும், முதியோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு நல உதவிகளை வழங்கியும் மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் இம்முறை மிக்ஜம் புயல் காரணமாக சென்னை பகுதிகளில் பல இடங்களில் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறும், தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதை தவிா்க்க திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெளியிட்ட அறிக்கையில், ஆண்டுதோறும் டிசம்பா் 10- ஆம் தேதி திமுகவினரும்,

எனது நண்பா்களும் என்னுடைய பிறந்த நாளையொட்டி கட்சித் கொடியேற்றுதல், பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்குதல், தொண்டு நிறுவனங்களில் உள்ளவா்களுக்கு நல உதவிகள் வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த ஆண்டு சென்னையில் மிக்ஜம் புயலால் 50- க்கும் மேற்பட்ட இடங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலை திரும்புவதற்கான பணிகளை செய்து வருகின்றனா். இந்த இக்கட்டான சூழலில் திமுகவினா்,

நண்பா்கள் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதை தவிா்க்க வேண்டும். என் பிறந்த நாளையொட்டி கண்டிப்பாக நிகழ்ச்சிகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம். மாறாக, தங்கள் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள் என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி , வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார். மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் பொருட்டு அரிசி, பெட்ஷீட், பால் ,பிஸ்கட் ,

உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை கீழ்பென்னத்தூர் தொகுதியின் சார்பில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, நேரில் சென்று சென்னை மக்களுக்கு வழங்கினார் வழங்கினார்.

Tags

Next Story