திருச்செங்கோடு அருகே உமூன்று கடைகளில் கொள்ளை முயற்சி
திருச்செங்கோடு மாங்குட்டை பாளையம் பகுதியில் கோபி என்பவர் ஆர்கே மளிகை கடை நடத்தி வருகிறார் இவர் நேற்று இரவு கடையை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றுள்ளார் இன்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைபட்டு கிடந்தது,
அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் சட்டரை திறந்து பார்த்தபோது கடையனுள் இருந்த மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன மேலும் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் விசாரணை செய்த திருச்சங்கோடு நகர காவல் துறையினர் அருகில் ஏதாவது சி சி டிவி உள்ளதா என்று சென்று பார்த்த போது இரண்டு கட்டிடம் தாண்டி அஞ்சனா பியூட்டி பார்லர் என்ற கடையும் மில்க்கிமிஸ்ட் கடையின் பூட்டும் உடைபட்டு இருந்தது மில்கி மிஸ்ட் கடையின் சிசிடிவி காட்சியை பார்த்தபோது டிப்டாப் உடையடைந்த ஆசாமி சிசிடிவி கேமராவை உடைத்துள்ள காட்சி பதிவாகி இருந்தது மேலும் இரு கடைகளில் பூட்டும் உடைபட்டு கிடந்துள்ளது அந்த இடத்தையும் விசாரணை செய்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தி வருகின்றனர் அதிர்ஷ்டவசமாக எந்த பொருளும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது கோபி அவர்களின் மளிகை கடையில் மட்டும் சுமார் 5,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் திருடு போக போனது தெரியவந்துள்ளது சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்