மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம்
பிரச்சார நிகழ்ச்சி
ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம்- ஆட்சியர் தொடங்கிவைப்பு அரியலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது
இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாற்று திறனாளிகளுக்கு வழங்கபடும் 72 வகையான நலத்திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்தும் தெருமுனை பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் நடத்தபட உள்ளதாக தெரிவிக்கபட்டது. மேலும் ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளதாக தெரிவிக்கபட்டது. மேலும் இதுகுறித்த துண்டு பிரச்சுரங்களும் வழங்கபட்டது. இதில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.