நாம்தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம்

X
ரத்தான முகாம்
நாம்தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் கடுகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைப்பெற்றது வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா தலைமையில் நடைப்பெற்ற ரத்ததான முகாமில் நாம்தமிழர் கட்சியினர் 19 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
இதனையடுத்து சேகரிக்கபட்ட ரத்தம் அரியலூரில் உள்ள ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கபட்டது. இதில் ரத்த வங்கி மருத்துவர் சந்திரசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் அருண்பாண்டியன், ஆனந்தராஜ், ராஜா மற்றும் நாம்தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
