வைகுண்ட ஏகாதசி திருவிழா; புறக்காவல் நிலையம் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்குகிறது..இந்த திருவிழாவானது நாளை முதல் வரும் 22ம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 23.ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வரும் 23 ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். திறப்பு விழாவின் போது ஶ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் இந்து அறநிலைய துறை இணை ஆணையர், செயல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டர்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, கடந்த வருடம் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள், மேலும் இந்த வருடம் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைகுந்த ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுமார் 2500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் பகல் பத்து மற்றும் இராப்பத்தின் போது திருச்சி மாநகர காவல்துறையினர் மட்டும் 380 பேர் 2 சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி வசதியாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்திலிருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 120 CCTV கேமராக்களிலும் 70,000 குற்றாவாளிகளின் புகைப்படங்களை முகம் அடையாளம் காணும் மென்பொருள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 13.12.2023-ந் தேதிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்கள்.

Tags

Next Story