திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - கவுன்சிலர்கள் வேதனை

திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - கவுன்சிலர்கள் வேதனை
கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. 18 உறுப்பினர்கள் கொண்ட ஊராட்சி ஒன்றியத்தில் 14 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதில் பாமகவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தங்களுடைய பகுதிக்கு வரும் வேலைகளை ஊராட்சி ஒன்றிய தலைவரே செய்து விடுகிறார். அதனால் எங்களுக்கு எந்த வேலையும் கொடுப்பதில்லை என்று வாக்குவாதம் செய்தார்.

அதன் பிறகு திமுகவைச் சேர்ந்த ஈஸ்வரன் கவுன்சிலர் பேசுகையில், இந்த திமுக ஆட்சியில் எந்த விதமான வேலைகளையும் சரியாக செய்வதில்லை. விவசாய நிலங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த விவசாய துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் சரி, இந்த மாவட்ட நிர்வாகமும் சரி, பொறுப்பாளர்களும் சரி, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

Tags

Next Story