பிரதான சாலையில் குழாய் உடைப்பு - வீணாகும் குடிநீர்
குடிநீர் குழாய் உடைப்பு
சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட செட்டிப்பட்டி பகுதியில் எடப்பாடியிலிருந்து குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் சாலையில் வீணாக செல்வதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையின் நடுவே உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டுமொன அப்பகுதி பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story