திருப்பாச்சேத்தியில் நேர்த்திக்கடக்கனுக்காக ராட்சத அரிவாள்

திருப்பாச்சேத்தியில் நேர்த்திக்கடக்கனுக்காக  ராட்சத அரிவாள்

இராட்சத அரிவாள்

திருப்பாச்சேத்தியில் நேர்த்திக்கடக்கனுக்காக ராட்சத அரிவாள் தயாராகி வருகிறது.

திருப்பாச்சேத்தியில் இரண்டு அடி முதல் 21 அடி உயரம் கொண்ட அருவா தயாரிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து பழைய கனரக வாகனங்களின் இரும்பு பட்டாக்களை வாங்கி வந்து பட்டறையில் நெருப்பில் இட்டு தட்டிஅருவா தயாரிக்கின்றனர்.

ராட்சத அருவாவின் எடையை பொறுத்து வேலை செய்யும் நாட்கள் அதிகரிக்கும், அருவா தயாரித்த பின் அதனை சிமெண்ட் து£ணில் நிலை நிறுத்த வசதியாக கீழ்புறமும் மேற்புறமும் தனித்தனி துளைகள் இடுகின்றனர். அருவாவின் உட்புறம் மணிகளும் கட்டப்படுகின்றன. திருப்பாச்சேத்தியில் உள்ள அருவா பட்டறையில் கட்டனு£ரில் கட்டப்பட்டு வரும் கருப்புச்சாமி கோயிலுக்காக 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அருவா தயாரிக்கப்படுகிறது.

கடந்த 15 நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து இந்த அருவாவை தயாரித்துள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் விஜயகுமார் கூறுகையில் ராட்சத அருவா பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. தனித்தனி இரும்பு தகடுகள் வாங்கியும், ஒரே தகடு கொண்டும் அருவா தயாரிக்கப்படுகிறது. மற்ற அருவாக்களை காட்டிலும் நேர்த்தி கடன¢அருவா தயாரிப்பதில் வேலைப்பளு அதிகம். இந்த அருவா 21 அடி உயரம், 400 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. லாரி போன்ற கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கிரேன் மூலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. மாசி மாதங்களில் சிவன்ராத்திரி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் அதிகளவு நேர்த்திகடன் அருவா வாங்கி செல்வார்கள் என்றார்

Tags

Next Story