வஸந்தவல்ல பராஜபெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

X
சொர்க்க வாசல் திறப்பு
சங்ககிரி அருள்மிகு வஸந்தவல்லபராஜபெருமாள் கோவிலில் திறப்பு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
சேலம் மாவட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோவிலில் வைகுந்த ஏகாதசியையொடட்டி பரமபதவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. வைகுந்த ஏகாதசியையொட்டி ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோவிலில் அருள்மிகு வசந்தவல்லபராயபெருமாள் சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக,, அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி சுவாமி கருடவாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டார். பின்னர் மார்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பாடிய பின்னர் சுவாமி அதிகாலை பரமபதவாசல் வழியாக வெளியே வந்தார். வெளியே வந்த சுவாமியை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க வரவேற்று வழிபட்டனர். அதனையடுத்து அர்ச்சகர்கள் சுவாமி பரமபதவாசல் வழியாக வந்தப்பின்னர் பெருமாள் சிறப்பு பக்தி பாடல்களை பாடினர். இதனையடுத்து சுவாமி கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. சுவாமி பரதபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த போது பெண்கள் சுவாமிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று சாமியே வழிபாட்டு சென்றனர்.
Next Story
