முன்மாதிரி திருநங்கைக்கு விருது வாய்ப்பு..!

மாவட்ட ஆட்சியர்
சமூக நலத்துறையின் சார்பில், திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் 2023- 24 ஆம் ஆண்டுக்கு திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ம் தேதி அன்று மாநில அளவிலான ஒரு திருநங்கைக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும். திருநங்கையர் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.
திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் சாதனைகளை, நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். திருநங்கைகள் முன்மாதிரி விருதுக்கு ரூ.1,00,000 க்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படும்.
மேற்காணும் தகுதிகள் உடைய திருநங்கையர்கள் 05.02.2024 மாலை 5.45 க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) விண்ணப்பித்து மற்றும் ஒரு கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம் (DRDA Old Building) மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் தொலைபேசி எண்.9150057214 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
