பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!


பைல் படம்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இந்தக் கோயிலில் ஜனவரி 25-ம் தேதியன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பயணிகளின் வசதிக்காக மதுரை - பழநி இடையே ஜனவரி 24 மற்றும் 25 உள்ளிட்ட நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மதுரை - பழநி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பழநி - மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.
Next Story


