மேட்டூரில் லாரி ஓட்டுனர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்.

மேட்டூரில் லாரி ஓட்டுனர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்.


சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே ராமன் நகரில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது .


சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே ராமன் நகரில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது .

மேட்டூர் அருகே ராமன்நகரில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் ஓட்டுனர்கள் மீது பத்து லட்சம் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் ஹிட் அன்ட் ரன் என்ற புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த சட்டத்தை கண்டித்து மேட்டூர் அருகே ராமன்நகர் பேருந்து நிறுத்தம் முன்பு மேட்டூர் தாலுக்கா அனைத்து வாகன ஒட்டுனர்கள் நல சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாஜலம் தலைமை வகித்தார்.

இதில் மத்திய அரசு கொண்டு வந்த ஹிட் அண்ட் ரன் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும், பணியில் இருக்கும் ஓட்டுனர்களை தாக்கும் நபர் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுத்து ஓட்டுனர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், லாரி ஓட்டுநர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் , ஒட்டுனர் கையொப்பம் இல்லாமல் ஆன்லைன் கேஸ் போடும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பேராட்டத்தில் மேட்டூர் தாலுகா அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பூபதி உள்பட ஏராளமான ஒட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story