காட்பாடி மேல்மாயில் கிராமத்தில் மஞ்சு விரட்டு திருவிழா.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் மயிலாரை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுவிடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
மயிலாரை முன்னிட்டு காட்பாடி மேல்மாயில் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சு விரட்டு திருவிழா. வாடிவாசல் வழியாக சீறி ஓடிய காளைகளை தட்டி உற்சாகப்படுத்திய இளைஞர்கள் . வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் மயிலாரை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுவிடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது இதில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து ஓடின.
மொத்தம் 2 சுற்றுகள் நடைபெற்றது இதில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டி சீரிப்பாய்ந்து ஒடிய காளைகளுக்கு முதல் பரிசாக 1.00.000 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 80,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 60,000 ரூபாயும், நான்காவது பரிசாக 35,000 ரூபாயும், ஐந்தாவது பரிசாக 25,000 ரூபாய் என வெற்றி பெற்ற 65 மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் கிராம மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இளைஞர்கள் மஞ்சு விரட்டு திருவிழாவை காண குவிந்திருந்தனர் . மேலும் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியும் போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.