கிராம சபா கூட்டத்தில் பாலியல் வன்கொடுமை தடுக்க விழிப்புணர்வு
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற கட்டிடம் அருகே நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் வீரராக வன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோகுல் வரவேற்றார். கூட்டத்தில், கடந்த நவம்பர் மாதம் 14வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (21) என்பவர் காதலித்து உல்லாசமாக இருந்து, பின்னர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
கொலை வழக்கில் யோகேஸ்வரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளார். மகளை இழந்த பெண் லட்சுமி சாலை, கால்வாய் சரியில்லை என கூறுகீறிர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக எனது மகளை பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்துள்ளனர். என் மகளுக்கு ஏற்பட்டது போல் யாருக்கும் இங்கு ஏற்படக்கூடாது என்ப தற்காக இது போன்ற கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அதே போல் பெரிய கிராமமாக உள்ள இங்கு கண்காணிப்பு கேமரா ஏற்படுத்த ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.