குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம்

குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம்
அலையில் சிக்கி உயிரிழந்த வாலிபர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, புலிக்குகை, ஆகிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் பல ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இன்று குடியரசு தின விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் மாமல்லபுரம் சுற்றுலா வந்திருந்தனர். இதில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்பதூர் சோமங்கலம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் மொத்தம் 7 பேர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.

அவர்கள் மாமல்லபுரம் பகுதியில் உள்ள முக்கிய புராதன சின்னங்களை கண்டு ரசித்து விட்டு இறுதியாக கடற்கரைக்கு வந்தனர். இதில் 3 பேர் கடலில் குளித்தனர். இதில் நண்பர்களான 2 பேரை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது.

அவர்கள் இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர். இறந்தவரில் ஒருவர் சோமங்கலம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோகன் (வயது 34), அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார்.

மற்றொருவர் சென்னை திருநீர்மலை அடுத்துள்ள நாகல்கழனி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பாலு (வயது 44) என்பவர் ஆவார். இவர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். சுமார் 1 மணி நேரம் கழித்து இருவரின் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியபோது உடன் வந்த உறவினர்கள் இருவரின் உடரை பார்த்து கதறி அழுதனர்.

அதேபோல் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி பகுதியை சீனிவாசன்(வயது36), சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனராக உள்ள இவரும் சுற்றுலா வந்து கடலில் குளித்தார்.

ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தார். பிறகு தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பிரேதசோதனைக்காக செங்கல்பட்டு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

Tags

Next Story