பூக்களின் விலை குறைவு விவசாயிகள் கவலை

பூக்களின் விலை குறைவு விவசாயிகள் கவலை

பூக்களின் விலை உயர்வு

சேலம் மாவட்டத்தில் பூக்களின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, தேவூர், வட்ராம்பாளையம், சென்றாயனூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணீர் தாசனுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100க்கம் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் கிணற்று நீர் பாசனத்தை கொண்டு செண்டுமல்லி, செவ்வந்தி பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ சாமந்தி 80 முதல் 120 வரை விற்பனையானதாகவும் தற்போது ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story