நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மத்திய அரசு சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும். கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனமும் இணைந்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் வண்டி பிரச்சாரம் பயணம் கலை நிகழ்ச்சிகளுடன் நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்.ரகுநாத் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் வண்டிபிரச்சாரமானது மாவட்டத்தில் உள்ள் 20 இடங்களில் நடைபெற்றது. இதில் செல்லும் கலை குழுவினர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவரிடையே பாரம்பரிய கலை நிகச்சிகள் வாயிலாக புதுபிக்கதக்க ஆற்றல். திடகழிவு மேலாண்மை நீர் பாதுகாப்பு.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை தவிர்த்தல், காலநிலை மாற்றம். பல்லுயிர் பெருக்கும். மண் வளம் மற்றும் இயற்மை வளம் காத்தல் போன்றவற்றறை பற்றிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

ஆதிக அளவில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் காபி டீ கப் தண்ணீர் கப். என அன்றாட வாழ்க்கையில் டீ கடை ஹோட்டல் விசேஷ வீடுகள் மற்றும் கல்யாண மஹால்கள். என அதிகரித்துக்கொண்டே செல்கிறது ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எரியப்படும் குப்பைகழிவுகள்.

இவற்றை பொதுமக்கள் மற்றும் வருங்கால இளைய சமுதாயத்தினரான மாணவர்கள் உணாந்து அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பாரம்பரிய முறையில் சில்வர் டம்ளர். கண்ணாடி டம்ளர் தட்டு, வாழை இலை இவற்றை பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற விழிப்பணர்வு பணிகளை தகவல் வண்டி பிரச்சாரத்தின் வாயிலாக மேற்பொண்டு வருகின்றனர். மேலும் பிளாஷ்டிக் பைகளை பயன்படுத்தாது துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பனபோன்ற விழிப்புணர்வு பணிகளை தகவல் வண்டி பிரச்சாரத்தின் வாயிலாக மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் சுற்றுச்சூழல் கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரச்சுரம் மற்றும் துணி பை அனைவருக்கும் வழங்கப்பட்டது மற்றும் விழிப்புணர்வு ஒலி நாடாக்கள் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் சுற்றுக்குழல் விழிப்புணர்வு கருத்துக்கள் செல்லும் வகையில் ஒலிபெருக்கி வாயிலாக ஒலிபரப்பிவருகின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு. கோ. வேங்கடேசன். செயலாளர்.தொண்டு நிறுவனம் அவர்கள் செய்திருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story