ஆலமரத்தை எடுக்கக் கூடாது - போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..

ஆலமரத்தை எடுக்கக் கூடாது - போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..

போராட்டம் 

நூறு ஆண்டுப் பழமை வாய்ந்த ஆலமரத்தை எடுக்கக் கூடாது என மரத்தை சுற்றி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..
நூறு ஆண்டு பழமையான ஆலமரத்தை இடமாற்றம் செய்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அருகே புரன்சாமேடு பகுதியில் ஆற்காடு வேலூர் செல்லும் சாலையோரம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆலமரம் இருந்து வருகிறது இந்த ஆலமரத்தை அப்பகுதி மக்கள் முனீஸ்வர சாமி வழிபாட்டிற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆற்காடு வேலூர் செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் சாலை ஓரம் இருக்கக்கூடிய ஆலமரத்தை அப்புறப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஓரம் இருக்கக்கூடிய ஆலமரத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் விதமாக நடவடிக்கை எடுத்துவிட்டு அதற்கு பின்பு மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்து ஆலமரத்தை சுற்றி அமர்ந்தும் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சம்பவம் அறிந்து விரைந்து வந்த வாலாஜா வட்டாட்சியர் ராணிப்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் ஆலமரத்தை மாற்று இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

Tags

Next Story