புனித அல்போன்சா கல்லூரியில் கணிதவியல் தேசிய கருத்தரங்கம்

புனித அல்போன்சா கல்லூரியில் கணிதவியல் தேசிய கருத்தரங்கம்

புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடந்த தேசிய கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  

குமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதவியல் துறை சார்பாகத் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்பணியாளர் ஆன்றனி ஜோஸ் 'பயன்பாட்டு கணிதம் - சமீபத்திய போக்குகள்' என்கிற பொருண்மையில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கைத் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அருட்பணியாளர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி முன்னிலை உரையாற்றினார். புதுக்கோட்டை எச்.எச்.ராஜாஸ் கல்லூரியின் கணிதத்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் கே.எல்.முருகானந்த பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கணிதவியல் பயன்பாடுகள் மற்றும் தற்போதைய போக்குகள்' குறித்துப் பேசினார்.

இத் தேசியக் கருத்தரங்கை ஒட்டி கல்லூரிகளுக்கிடையே போட்டிகளும் நடைபெற்றன. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி வென்றது. கல்லூரி ஆன்மீக வழிகாட்டி அருட்பணியாளர் அஜின் ஜோஸ், கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஆர். சிவனேசன் வாழ்த்துரை வழங்கினர். இக்கருத்தரங்கில் கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துக்குடி, மதுரை திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 300 க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story